எம்.பில். படிப்பு அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பு கிடையாது - பல்கலைக்கழக மானிய குழு எச்சரிக்கை

புதிய கல்வி ஆண்டில் எம்.பில். படிப்பிற்கு மாணவர்களை சேர்க்க கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2023-12-27 10:53 GMT

டெல்லி, 

எம்.பில். படிப்பை முடித்தவா்கள் கல்லூரியில் பாடம் நடத்தத் தகுதி உடையவா்களாக முன்பு பாா்க்கப்பட்டு வந்தது. இதனால், பெரும்பாலான மாணவா்கள் இளநிலை, முதுநிலை படிப்பை முடித்து, எம்.பில். படிப்பைத் தோ்வு செய்து வந்தனர். இந்த நிலையில் கற்பித்தல் பணிக்கு எம்.பில். படிப்பு தகுதியானது இல்லை, எம்.பில். படித்திருந்தாலும் அதை ஒரு தகுதியாகக் குறிப்பிட முடியாது என்று கூறி 2022-23 -ம் ஆண்டு கல்வி ஆண்டில் இருந்து எம்.பில். படிப்பு முழுவதுமாக நீக்கப்படுகிறது என பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்திருந்தது. இது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அரசாணையாக வெளியிடப்பட்டது.

இதனை பொருட்படுத்தாமல் சில கல்வி நிறுவனங்கள் எம்.பில். படிப்பில் மாணவர்களை சேர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் எம்.பில். பட்டமானது ஒரு அங்கீகரிக்கப்பட்ட பட்டம் கிடையாது என கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையை சுட்டி காட்டி பல்கலைக்கழக மானியக்குழு மீண்டும் அறிவித்துள்ளது. அதன்படி புதிய கல்வி ஆண்டில் எம்.பில். படிப்பிற்கு மாணவர்களை சேர்க்க கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்