காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை

காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கொப்பல் மாவட்டத்தில் நடந்துள்ளது.

Update: 2022-05-24 21:05 GMT

பெங்களூரு 


கொப்பல் மாவட்டம் குஷ்டகி தாலுகா அடவிபாவி கிராமத்தைச் சோ்ந்தவர் அமரேஷ்(வயது 21), அதே கிராமத்தில் வசித்து வந்தவர் எல்லம்மா(18). இவர்கள் 2 பேரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் சமீபத்தில் இருவரது பெற்றோருக்கும் தெரிந்தது. 2 பேரும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோரும் காதலுக்கு சம்மதம் தெரிவித்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.


கடந்த சில தினங்களுக்கு முன்பு அமரேசுக்கும், எல்லம்மாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிலையில் நேற்று எல்லம்மாவின் வீட்டில் எல்லம்மாவும், அமரேசும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து தாவரகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்