"பிரதமர் மோடியை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" - இந்தியா வருகையை உறுதி செய்த எலான் மஸ்க்
எலான் மஸ்க் வருகிற 22-ந் தேதி இந்தியா வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.;
புதுடெல்லி,
உலக பணக்காரர்களில் ஒருவரும், 'எக்ஸ்' வலைத்தள நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் வருகிற 22-ந் தேதி இந்தியா வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருகையின் போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பார் என்றும், இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் முதலீட்டு திட்டங்களை அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது அவரை எலான் மஸ்க் சந்தித்து பேசியதும், அப்போது அவரிடம் 2024-ல் தான் இந்தியா வருவதாக எலான் மஸ்க் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
.இந்த சந்திப்பு குறித்து எலான் மஸ்க் தனது எக்ஸ் வலை தளப் பக்கத்தில், "இந்தியாவில் பிரதமர் மோடியுடனான சந்திப்பை எதிர்நோக்கியுள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார்.