கா்நாடகத்தில், லோக் அயுக்தா நீதிபதி விரைவில் நியமனம்-முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தகவல்

கா்நாடகத்தில், லோக் அயுக்தா நீதிபதி விரைவில் நியமனம் செய்யப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-08 22:08 GMT

பெங்களூரு: கர்நாடக லோக் அயுக்தா நீதிபதியாக இருந்த விஸ்வநாத் ஷெட்டி ஓய்வு பெற்று பல மாதங்கள் ஆகி விட்டது. ஆனால் இன்னும் புதிய நீதிபதி நியமிக்கப்படாமல் உள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டிலும் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, லோக் அயுக்தா நீதிபதியை உடனடியாக நியமிக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து நேற்று மைசூரு விமான நிலையத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடக மாநில லோக் அயுக்தா நீதிபதியை நியமிக்கும் பணிகள் நடந்து வருகிறது. நீதிபதியை நியமிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கர்நாடக ஐகோர்ட்டும் லோக் அயுக்தா நீதிபதியை உடனடியாக நியமிக்கும்படி உத்தரவிட்டுள்ளது. இதனால் கூடிய விரைவில் கர்நாடக லோக் அயுக்தாவுக்கு புதிய நீதிபதி நியமிக்கப்படுவாா். மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் இடையே இருக்கும் பிரச்சினைகள் பற்றி பா.ஜனதாவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. பா.ஜனதா சார்பில் நிறுத்தப்பட்டுள்ள 3 வேட்பாளர்களும், எங்கள் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் பலத்துடன் வெற்றி பெறுவார்கள். இதற்காக யாருடைய ஆதரவையும் கேட்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்