உதவி தேவைப்படுவோரின் வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டு வர முயற்சி செய்வோம்: ஜனாதிபதி தீபாவளி வாழ்த்து

அறிவு மற்றும் சக்தியின் விளக்கை ஏற்றி உதவி தேவைப்படுவோரின் வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டு வர முயற்சி செய்வோம் என ஜனாதிபதி தீபாவளி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

Update: 2022-10-24 04:02 GMT



புதுடெல்லி,


தீபங்களின் திருவிழா எனப்படும் தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகமுடன் கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் புதிய ஆடைகளை அணிந்தும், பலகாரங்களை உண்டும், பட்டாசு வெடித்தும் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.

இதனை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு தனது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் இன்று வெளியிட்டு உள்ள வாழ்த்து செய்தியில், நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்!

ஒளி மற்றும் மகிழ்ச்சிக்கான புனித திருவிழாவில், அறிவு மற்றும் சக்தியின் விளக்கை ஏற்றி உதவி தேவைப்படுவோரின் வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டு வர நாம் முயற்சி செய்வோம்.

இந்த பெருவிழாவில், நாட்டு மக்கள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும், வளமும் பெருக வேண்டி கொள்கிறேன் என டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். இதேபோன்று பிரதமர் மோடியும் தனது தீபாவளி வாழ்த்துகளை நாட்டு மக்களுக்கு தெரிவித்து கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்