"எங்கள் தவறுகளை திருத்திக் கொண்டு, மீண்டும் கட்சியை பலப்படுத்துவோம்"- கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை
தேர்தலில் அவர் வெற்றி பெற்றிருந்தாலும், பாஜகவின் தோல்வியால் வருத்தத்துடன் கானப்பட்டார்.;
பெங்களூரு,
கர்நாடகா சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 132 இடங்களிலும், பாஜக 66 இடங்களிலும், மஜத 22 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
இதன் மூலம் 132 தொகுதிகளில் முன்னிலையில் உள்ள காங்கிரஸ் கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுன் ஆட்சி அமைக்க உள்ளது. இதனிடையே கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை வெற்றிபெற்றுள்ளார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட யாசிர் அகமதுகான் பதானை விட 18 ஆயிரத்து 990 வாக்குகள் வித்தியாசத்தி வெற்றிபெற்றுள்ளார்.
தேர்தலில் அவர் வெற்றி பெற்றிருந்தாலும், பாஜகவின் தோல்வியால் அவர் வருத்தத்துடன் கானப்பட்டார்.
முதல் மந்திரி பசவராஜ் பொம்மை செய்தியாளர்களை சந்திக்கையில் கூறியதாவது; வெற்றிக்கான இடங்களை எங்களால் பெற முடியவில்லை. முடிவுகள் முழுவதுமாக வந்ததும், எங்கே நாங்கள் வாய்ப்பை தவறவிட்டோம் என அலசுவோம்.
எங்கள் தவறுகளை திருத்திக் கொண்டு, மீண்டும் கட்சியை பலப்படுத்துவோம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிறப்பாக செயல்படுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.