சித்தராமையா ஆட்சி காலத்தின் ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம்- நளின்குமார் கட்டீல் பேட்டி

சித்தராமையா ஆட்சி காலத்தில் நடந்த ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம் என்று பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் ெதரிவித்துள்ளார்.

Update: 2022-09-13 16:02 GMT

மைசூரு: சித்தராமையா ஆட்சி காலத்தில் நடந்த ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம் என்று பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் ெதரிவித்துள்ளார்.

நளின்குமார் கட்டீல் பேட்டி

பா.ஜனதா மாநில தலைவரும், தட்சிண கன்னடா ெதாகுதி எம்.பி.யுமான நளின்குமார் கட்டீல் மைசூருவில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் நேற்றுமுன்தினம் கலந்துகொண்டார். இதற்கிடையே அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது அர்க்காவதி திட்டம், தங்கும் விடுதிகளுக்கு படுக்கை வழங்கியதில் ஊழல் நடந்துள்ளன. இதனை அவர்கள் மூடிமறைத்துள்ளனர். இந்த ஊழல் பற்றி சட்டசபையில் கேள்வி எழுப்பினோம். தற்போது அந்த ஊழல்களை வெளிகொண்டுவர பா.ஜனதா நடவடிக்கை எடுத்து வருகிறது. சப்-இன்ஸ்பெக்டர் ேதர்வில் முறைகேடு நடந்திருப்பது தெரிந்ததும் உடனே விசாரணைக்கு உத்தரவிட்டோம். இந்த முறைகேட்டில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

சரியானது அல்ல

ஆனால் சித்தராமையா அவரது ஆட்சி காலத்தில் நடந்த முறைகேடுகளை ஏன் மறைக்கிறார். பா.ஜனதா ஆட்சியில் 40 சதவீதம் கமிஷன் குற்றச்சாட்டுக்கு காங்கிரசிடம் ஆதாரம் உள்ளதா. அப்படி இருந்தால் அதனை காண்பிக்க வேண்டும். ஆனால் தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் குற்றம்சாட்டுவது சரியானது அல்ல.

சித்தராமையாவின் ஆட்சி காலத்தில் நடந்த ஊழல்களை விசாரணை நடத்தி வெளிச்சத்திற்கு கொண்டு வருவது நிச்சயம். அதில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்