ஜாமீன் வழங்குவதை முறைப்படுத்த சட்டம் இயற்ற வேண்டும் - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரை
சுப்ரீம் கோர்ட்டில் சத்யேந்தர் குமார் அண்டில் என்பவர், ஜாமீன் வழங்குவதை முறைப்படுத்த சட்டம் இயற்ற வேண்டும் என மனு தாக்கல் செய்தார்.
புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டில் சத்யேந்தர் குமார் அண்டில் என்பவர், ஜாமீன் வழங்குவதை முறைப்படுத்த சட்டம் இயற்ற வேண்டும் என மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு அளித்தது. அதில், 'ஜாமீன் வழங்குவதை முறைப்படுத்த சட்டம் இயற்ற வேண்டும். ஜாமீன் மனுக்களை விசாரித்து தீர்ப்பு அளிக்க கால வரையறையை அமைக்க வேண்டும்' என்றும் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.