லதா மங்கேஷ்கரின் 93வது பிறந்தநாள்: அயோத்தியில் உள்ள சாலைக்கு அவரது பெயர் சூட்டப்படுவதில் மகிழ்ச்சி - பிரதமர் மோடி

பாடகி லதா மங்கேஷ்கரின் 93வது பிறந்தநாளை முன்னிட்டு 40 அடி நீளமும், 14 டன் எடை கொண்ட வீணையை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

Update: 2022-09-28 10:31 GMT

புதுடெல்லி,

இந்தியாவின் இசைக்குயில் என்றழைக்கப்பட்ட மறைந்த பழம்பெரும் சினிமா பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் 93வது பிறந்தநாளை முன்னிட்டு 40 அடி நீளமும், 14 டன் எடை கொண்ட வீணையை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அயோத்தியாவில் சரயு நதிக்கரையில் 7.9 கோடி மதிப்பில் வீணை நிறுவப்பட்டுள்ளது. இந்த வீணை 40 அடி நீளமும், 14 டன் எடை கொண்டதாகும். இந்த வீணையை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், சுற்றுலாத்துறை மந்திரி கிஷன் ரெட்டி ஆகியோரும் பங்கேற்றனர்

தொடர்ந்து காணொளி காட்சி வாயிலாக பேசிய பிரதமர் மோடி,

அயோத்தியில் உள்ள லதா மங்கேஷ்கர் நினைவாக நிறுவப்பட்ட சரஸ்வதியின் பெரிய வீணை இசை நல்லிணக்கத்தின் அடையாளமாக மாறும். அந்த வீணையில் உள்ள 92 வெள்ளை பளிங்கு கற்களால் செய்யப்பட்ட தாமரை லதா மங்கேஷ்கரின் 92 வயது வரையிலான வாழ்நாளை சித்தரிக்கிறது. இன்று அயோத்தியில் உள்ள சாலை ஒன்றுக்கு அவரது பெயர் சூட்டப்படுவதில் மகிழ்ச்சியடைவதாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்