மராட்டியத்தில் நிலச்சரிவு-பலி எண்ணிக்கை 26ஆக உயர்வு..!
மராட்டியத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் என்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது.
புனே,
மராட்டியத்தின் ராய்காட் மாவட்டத்தில் இர்ஷல்வாடி கிராமத்தில் கனமழையை தொடர்ந்து பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. 17 வீடுகள் இடிந்து விழுந்து உள்ளன.
தற்போது இந்த சம்பவத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது. இதில் 9 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
தொடர்ந்து நிலச்சரிவு இடிபாடுகளில் எவரேனும் சிக்கியிருக்கிறார்களா? என கண்டறியும் பணி நடந்து வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினரும் தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே ராய்காட் மாவட்டத்தில் உள்ள மகாட் தாலுகா தலியே கிராமத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவில் 87 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது