மிசோரம் முதல்-மந்திரியாக பதவியேற்றார் லால்துஹோமா

மிசோரம் மாநிலத்தின் கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது;

Update:2023-12-08 15:04 IST

மிசோரம்,

வடகிழக்கு மாநிலமான மிசோரமில் ஏற்கனவே ஆட்சியில் இருந்த மிசோ தேசிய முன்னணியை வீழ்த்தி, மற்றொரு பிராந்திய கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியைக் கைப்பற்றியது. 40 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தலில் ஜோரம் மக்கள் இயக்கம்  27 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மிசோ தேசிய முன்னணிக்கு 10 இடங்கள் கிடைத்தன. பா.ஜ.க. 2 இடங்களை மட்டுமே கைப்பற்றிய நிலையில், காங்கிரசுக்கு ஒரு இடம் கிடைத்தது.

ஆட்சியமைக்க பெரும்பான்மை பெற்றதை அடுத்து மிசோரம் மாநிலத்தின் கவர்னர் மாளிகையில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஜோரம் மக்கள் இயக்க கட்சி தலைவர் லால்துஹோமா அம்மாநில முதல்-மந்திரியாக இன்று பதவியேற்றுக் கொண்டார். இவருடன் 11 பேர் மந்திரிகளாக பதவியேற்றுக் கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்