வேகமாக மூச்சை இழுத்தபோது நுரையீரலுக்குள் சிக்கிய மூக்குத்தி - அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவர்கள்

மேற்கு வங்காளத்தில் பெண் ஒருவர், வேகமாக மூச்சை இழுத்தபோது, அவர் அணிந்திருந்த மூக்குத்தியின் திருகாணி கழன்று நுரையீரலுக்குள் சிக்கியது.

Update: 2024-04-28 11:06 GMT

கோப்புப்படம் 

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில், பெண் ஒருவர் வேகமாக மூச்சை உள்ளே இழுத்தபோது, தவறுதலாக நுரையீரலில் சிக்கிக் கொண்ட மூக்குத்தியின் திருகாணியை மருத்துவர்கள் வெற்றிகரமாக, அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் வர்ஷா (35 வயது). இவர் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென வேகமாக மூச்சை உள்ளிழுத்துள்ளார். அப்போது அவர் அணிந்திருந்த மூக்குத்தியின் திருகாணி கழன்று நுரையீரலுக்குள் சிக்கியது. வயிற்றுக்குள் சென்றதாக நினைத்த வர்ஷா செரிமானமாகிவிடும் என்று நினைத்து சாதாரணமாக விட்டுள்ளார்.

இந்த நிலையில் அவருக்கு சில நாட்களாக மூச்சுவிட கடினமாக இருந்துள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது, பரிசோதனை மூலம் அவரது நுரையீரலில் மூக்குத்தியின் திருகாணி சிக்கி இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்து திருகாணியை மருத்துவர்கள் அகற்றினர். பின்னர் 4 நாட்களுக்குப் பிறகு வர்ஷா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.Full View

Tags:    

மேலும் செய்திகள்