குடகை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் மாநில அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால் குடகை வறட்சி மாவட்டமாக அறிவிக்கவேண்டும் என்று மாநில அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2023-08-28 18:45 GMT

குடகு-

தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால் குடகை வறட்சி மாவட்டமாக அறிவிக்கவேண்டும் என்று மாநில அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பருவமழை பொய்த்தது

கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் பெய்ய கூடிய தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யவில்ைல. இதையடுத்து ஜூலை மாதத்தில் தென்மேற்கு பருவமழை பெய்தது. ஆனால் அந்த பருவமழை தொடர்ந்து நீடிக்கவில்லை. இதனால் நீர்நிலைகளுக்கு வந்த தண்ணீரின் அளவு குறைய தொடங்கிவிட்டது. குறிப்பாக கர்நாடகத்தில் உள்ள அணைகளில் தற்போது நீர்மட்டம் குறைந்து வருகிறது.இந்தநிலையில் மலைநாடு மாவட்டமான குடகை வறட்சி மாவட்டமாக அறிவிக்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதாவது கடந்த 2021-ம் ஆண்டு மற்றும் 2022-ம் ஆண்டு தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கியது. இதனால் குடகில் ஏராளமான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாழ்வான இடங்களில் இருந்த விவசாய நிலங்களில் மழை நீர் புகுந்து பயிர்கள் நாசமானது. ஆனால் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. இதனால் காபி, பாக்கு, மிளகு, வாழை சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

வறட்சி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்

இதுவரை நட்ட பயிர்கள், அனைத்தும் தண்ணீர் இல்லாமல் வாடிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆழ்துளை கிணற்றில் இருந்து விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை எடுக்கலாம் என்று விவசாயிகள் முயற்சித்தனர். ஆனால் பருவமழை பொய்த்து போனதால் ஆழ்துளை கிணறுகளும் தண்ணீர் இல்லாமல் வறண்டு போனது. இதனால் விளைபயிர்களை சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

இதற்கு மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதாவது குடகு மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கவேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதுதவிர வேறு வழியில்லை என்று விவசாயிகள் புலம்பி வருகின்றனர். ஆனால் மாநில அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்பது தெரியவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்