கேரளா டூ இமாச்சல பிரதேசம்... நடந்தே சென்று சுற்றி பார்க்கும் இளைஞர்கள்..!
இந்தியா முழுவதையும் நடந்தே சென்று சுற்றி பார்க்க வேண்டும் என கேரளாவை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இருவர் விருப்பப்பட்டுள்ளனர்.
கோழிக்கோடு,
இந்தியா முழுவதையும் நடந்தே சென்று சுற்றி பார்க்க வேண்டும் என கேரளாவை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இருவர் விருப்பப்பட்டுள்ளனர்.
எனவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தங்களுக்கு தேவையான பொருட்களை தள்ளுவண்டியில் ஏற்றிக்கொண்டு பயணத்தை தொடங்கிய, கல்லூரி மாணவர்கள் முஸ்தபா மற்றும் ஸ்ரீராக், தற்போது இமாச்சல பிரதேச மாநிலம் மணாலியை சென்றடைந்துள்ளனர்.
செல்லும் வழியில், காணும் காட்சிகளை வரைந்து, அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து செலவு செய்துள்ளனர். இவர்கள் முழுமையாக தங்களது சுற்றுப்பயணத்தை முடித்த பிறகு, அனைத்து புகைப்படங்களையும் காட்சி படுத்த உள்ளதாகவும் தெவித்துள்ளனர்.