கேரளா: கொச்சியில் கடற்படைக்கு சொந்தமான துருவ் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது..!
கொச்சியில் கடற்படைக்கு சொந்தமான துருவ் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
கொச்சி,
கேரள மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் கடலோர காவல் படைக்கு சொந்தமான துருவ் ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. சோதனையின்போது ஏற்பட்ட கோளாறு காரணமாக அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. அவசரமாக தரையிறக்கப்பட்டதில் ஹெலிகாப்டர் ஓடுபாதைக்கு வெளியே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 3 பேர் காயம் அடைந்துள்ளதகாவும் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கொச்சியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.