பிப்.8-ம் தேதி இந்திய வரலாற்றில் ஒரு சிவப்பு எழுத்து தினம் - பினராயி விஜயன் பேச்சு

மத்திய அரசுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்திரில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

Update: 2024-02-08 08:08 GMT

புதுடெல்லி,

மத்திய பா.ஜ.க. அரசின் இடைக்கால பட்ஜெட் கடந்த 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன. நிதி ஒதுக்கீடு செய்வதில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தென் மாநிலங்கள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றன.

நேற்று கர்நாடகா அரசு போராட்டம் நடத்திய நிலையில், நிதிபகிர்வில் பாரபட்சம் காட்டுவது மற்றும் மாநில அரசில் மத்திய அரசின் தலையீடு ஆகியவைகளை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்திரில் கேரள அரசு சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் தோழமைக் கட்சிகள் பங்கேற்றுள்ளன. போராட்டத்திற்கு தமிழ்நாடு, டெல்லி அரசுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

போராட்டத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பேசியதாவது:-

இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பை பாதுகாக்க ஒன்றிணைந்துள்ளோம். அனைத்து மாநிலங்களையும் சமமாக நடத்துவதை உறுதி செய்வதை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறோம். பிப்ரவரி 8-ம் தேதி இந்திய வரலாற்றில் ஒரு சிவப்பு எழுத்து தினமாக இருக்கும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்