காஷ்மீர்: பாதுகாப்பு படை வீரர்களை கடத்தி சென்ற பயங்கரவாதிகள்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்கள் 2 பேர், பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Update: 2024-10-09 01:09 GMT

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்து, வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்று முடிவடைந்தது. இதில், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் நடந்த முதல் தேர்தல் என்ற வகையில் அது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்கள் ரோந்து சென்றபோது, 2 பேர் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், அவர்களில் ஒருவர் பயங்கரவாதிகளிடம் இருந்து தப்பி வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து, தகவல் அறிந்து, காணாமல் போன வீரரை மீட்கும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு உள்ளனர். அந்த பகுதியை தங்களுடைய கட்டுக்குள் கொண்டு வந்து வீரரை தேடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்