ஜெயின் துறவி கொலை: குற்றவாளிகளை பிடிக்கும் திறன் கர்நாடக போலீசாருக்கு உள்ளது - மந்திரி பிரியங்க் கார்கே பேட்டி
குற்றவாளிகளை பிடிக்கும் திறன் கர்நாடக போலீசாருக்கு உள்ளது என்று மந்திரி பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் மந்திரி பிரியங்க் கார்கே பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
ஜெயின் துறவி கொலை விவகாரத்தில் பா.ஜனதா அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்கிறது. இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கும்படி பா.ஜனதா சொல்கிறது. நமது போலீசார் சிறப்பான முறையில் விசாரணை நடத்தி தவறு செய்தவர்களை கைது செய்துள்ளனர். நமது போலீசாருக்கு குற்றவாளிகளை பிடிக்கும் திறன் உள்ளது. அதனால் சி.பி.ஐ. விசாரணை தேவை இல்லை.
அவரது கொலையின் பின்னணியில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக பா.ஜனதாவை சேர்ந்த சித்து சவதி கூறியுள்ளார். அவ்வாறு இருந்தால் அதுகுறித்து அவர் உரிய ஆதாரங்களை போலீசாரிடம் வழங்க வேண்டும். கர்நாடகத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. பா.ஜனதாவினர் இதுவரை எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுக்கவில்லை.
இவ்வாறு பிரியங்க் கார்கே கூறினார்.