'கர்நாடக தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடியின் தோல்வியை காட்டுகிறது' - காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ்

காங்கிரஸ் கட்சியின் வெற்றி என்பது பிரதமர் மோடியின் தோல்வி என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.;

Update:2023-05-13 16:23 IST

பெங்களூரு,

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந்தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. பெரும்பான்மைக்கு 113 தொகுதிகள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் 137 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றுகிறது.

இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கர்நாடக தேர்தலில் பா.ஜ.க., இது பிரதமர் மோடி மீதான வாக்கெடுப்பு என்று கூறி பிரச்சாரம் செய்தது. இந்நிலையில் கர்நாடக தேர்தல் முடிவுகள், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருப்பதையும், பிரதமர் மோடி தோல்வி அடைந்திருப்பதையும் தெளிவாகக் காட்டுகின்றன" என்று தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்