கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நாளை டெல்லி பயணம்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு நடைபெறும் பிரிவு உபசார விழாவில் கலந்து கொள்வதற்காக பசவராஜ் பொம்மை நாளை டெல்லி செல்கிறார்.
பெங்களூரு,
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நான் நாளைடெல்லி செல்கிறேன். அங்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு நடைபெறும் பிரிவு உபசார விழாவில் கலந்து கொள்கிறேன். வாரியங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம் மேற்கொள்ளப்படும். ஈசுவரப்பாவுக்கு மீண்டும் மந்திரி பதவி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும். காங்கிரசில் முதல்-மந்திரி பதவிக்கு மோதல் ஏற்பட்டுள்ளது. இது அவர்கள் கட்சியின் தனிப்பட்ட விஷயம். இதில் நான் தலையிட மாட்டேன். மந்திரிசபை விரிவாக்கம் குறித்து டெல்லியில் கட்சி மேலிட தலைவர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தப்படும்.இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.