கர்நாடகத்தில் புதிதாக 222 பேருக்கு கொரோனா

கர்நாடகத்தில் புதிதாக 222- பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-06-04 15:45 GMT

பெங்களூரு,

கர்நாடகத்தில் இன்று 23 ஆயிரத்து 644 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் புதிதாக 222 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 210 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். உடுப்பியில் 4 பேர், சித்ரதுர்காவில் 2 பேர், பல்லாரி, சிக்கமகளூரு, தட்சிண கன்னடா, கலபுரகி, ராய்ச்சூர், துமகூருவில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 39 லட்சத்து 53 ஆயிரத்து 58 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று புதிதாக உயிரிழப்பு இல்லை.

இதுவரை 40 ஆயிரத்து 65 பேர் உயிரிழந்து உள்ளனர். நேற்று 191 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 39 லட்சத்து ஆயிரத்து 691 பேர் குணம் அடைந்து உள்ளனர். 2,260 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். ஒரு நாள் பாதிப்பு 0.93 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு 1.32 சதவீதமாகவும் உள்ளது. மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்