'தாமதிக்கப்பட்ட நீதி என்றுமே நீதியாக கருதப்படாது' - ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி
தாமதிக்கப்பட்ட நீதி என்றுமே நீதியாக கருதப்படாது என ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.;
புதுச்சேரி,
சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"தாமதிக்கப்பட்ட நீதி என்றுமே நீதியாக கருதப்படாது. ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. மக்களுக்கு நீதி வழங்கக் கூடிய இந்த அமைப்பு விரைவில் வேறு விதத்தில் பார்க்கப்பட வேண்டும், காலதாமதத்தை தவிர்ப்பதற்கான ஒரு முறையை விரைவில் நாம் உருவாக்க வேண்டும்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.