விசாகப்பட்டினத்தில் 'மிலான் 24' கடற்படை கூட்டுப் பயிற்சி - அடுத்த மாதம் தொடக்கம்

‘மிலான் 24’ கூட்டுப் பயிற்சியில் பல்வேறு நாடுகளின் கடற்படைகள் கலந்து கொள்ள உள்ளன.;

Update:2024-01-10 22:17 IST

விசாகப்பட்டினம்,

இந்திய கடற்படையின் சார்பில், 'மிலான் 24' எனப்படும் 12-வது கடற்படை கூட்டுப்பயிற்சி, விசாகப்பட்டினத்தில் வரும் பிப்ரவரி 19-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 11-வது கடற்படை கூட்டுப்பயிற்சி விசாகப்பட்டினத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் மார்ச் வரை நடைபெற்றது.

இந்த ஆண்டு நடைபெறும் கூட்டுப்பயிற்சியில் பல்வேறு நாடுகளின் கடற்படைகள் கலந்து கொள்ள உள்ளன. கடல்சார் படைகளின் செயல்பாட்டு திறன்களை வளர்த்துக்கொள்வது, சிறந்த நடைமுறைகளை பகிர்ந்துகொள்வது மற்றும் கடற்படைகளுக்கு இடையிலான தொழில்முறை ஒத்துழைப்பை மேம்படுத்துவது ஆகியவை இந்த பயிற்சியின் நோக்கமாக கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்