இந்தியாவின் 4 நகரங்களில் இன்று முதல் ஜியோ 5ஜி சேவை தொடக்கம்
5ம் தலைமுறை தொலைத் தொடர்பு சேவையான 5ஜி நெட்வொர்க் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
புதுடெல்லி,
5ம் தலைமுறை தொலைத் தொடர்பு சேவையான 5ஜி நெட்வொர்க் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 1-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி இந்த சேவையைத் தொடங்கி வைத்தார். இந்த நிலையில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் தசரா பண்டிகையை முன்னிட்டு இந்தியாவின் 4 நகரங்களில் இன்று முதல் 5ஜி சேவையை அறிமுகப்படுத்துகிறது. மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசியில் இன்று முதல் சோதனை அடிப்படையிலான 5ஜி சேவையை தொடங்கவுள்ளதாக ஜியோ அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த 4 நகரங்களில் ஜியோவின் ட்ரு 5G பீட்டா சேவை, 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5ஜி சேவைகளைப் பெற புதிய சிம் தேவையில்லை எனவும் ஜியோ தெரிவித்துள்ளது.