ஜப்பான் பிரதமருக்கு கொரோனா: விரைவில் குணமடைய பிரதமர் மோடி டுவீட்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஜப்பான் பிரதமர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
டோக்கியோ, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .நேற்று இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது .அதில் அவருக்கு லேசான அறிகுறிகளுடன்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது . இதனை தொடர்ந்து புமியோ கிஷிடா தனிமைடுத்தப்பட்டு தற்போது பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார்.
இந்நிலையில் 'எனது நண்பர் ஜப்பான் பிரதமர் புமியோ ஷிகிடா கொரோனா தொற்றில் இருந்து விரைவில் நலம்பெற்று ஆரோக்கியமாக மீண்டுவர வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்' என்று பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.