ஜனதா தளம்(எஸ்) கட்சியின் 2-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு
50 தொகுதிகளுக்கு ஜனதா தளம் (எஸ்) கட்சி 2-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹாசன் தொகுதியில் ஸ்வரூப்புக்கு டிக்கெட் வழங்கப்பட்டு, பவானி ரேவண்ணாவுக்கு வாய்ப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:-
ஹாசன் தொகுதி
கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம்(மே) மாதம் 10-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே ஜனதா தளம்(எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. ஹாசன் தொகுதியில் தனது மனைவி பவானிக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்று கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ரேவண்ணா கேட்டு வந்தார். அதற்கு பதிலளித்த குமாரசாமி, எக்காரணம் கொண்டும் ஹாசன் தொகுதியி டிக்கெட் பவானிக்கு வழங்க முடியாது என்று திட்டவட்டமாக கூறினார்.
அந்த தொகுதி டிக்கெட் விஷயத்தில் தேவேகவுடா குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தனது மனைவிக்கு டிக்கெட் வழங்காவிட்டால், தான் தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என்று ரேவண்ணா பகிரங்கமாக அறிவித்தார். ஆனாலும் குமாரசாமி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை. ஹாசன் தொகுதியில் ஸ்வரூப் என்பவருக்கு தான் டிக்கெட் வழங்க முடியும் திட்டவட்டமாக கூறி வந்தார்.
பவானி ரேவண்ணா
இந்த நிலையில் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் 2-வது வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த பட்டியலை குமாரசாமி, பெங்களூருவில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து வெளியிட்டார். இதில் 50 தொகுதிகளுக்கு வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹாசன் தொகுதிக்கு ஸ்வரூப் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் பவானி ரேவண்ணாவுக்கு டிக்கெட் நிராகரிக்கப்பட்டுள்ளது. கடூர் தொகுதியில் ஒய்.எஸ்.வி.தத்தா, ஹொலேநரசிபுராவில் எச்.டி.ரேவண்ணா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒய்.எஸ்.வி.தத்தா, காங்கிரசுக்கு சென்று அங்கு டிக்கெட் கிடைக்காததால் மீண்டும் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரக்கல்கூடுவில் முன்னாள் மந்திரி ஏ.மஞ்சு போட்டியிடுகிறாா். ஜனதா தளம்(எஸ்) கட்சி இதுவரை 143 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இன்னும் 81 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்க வேண்டியுள்ளது.
இந்த 2-வது வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-
ராயபாக்-பிரதீப் மாலினி
1. குடசி ஆனந்த் மாலினி
2. ராயபாக் பிரதீப் மாலினி
3. சவதத்தி எல்லம்மா சரப ஆனந்த் சோப்ரா
4. அதானி மடாதிபதி சசிகாந்த்
படசலகி குருக்கள்
5. உப்பள்ளி-தார்வார் கிழக்கு
- வீரபத்ரப்பா ஹாலரவி
6. குமட்டா சூரஜ் சோனி நாயக்
7. ஹலியால் எஸ்.எல்.பொப்னேகர்
8. பட்கல் நாகேந்திர நாயக்
9. சிர்சி சித்தாப்புரா உபேந்திர பை
10. எல்லாப்புரா நாகேஸ் நாயக்
கலபுரகி வடக்கு-நசீர் உசேன் உஸ்தாத்
11. சித்தாப்புரா சுபாஷ்சந்திர ராத்தோட்
12. கலபுரகி வடக்கு நசீர் உசேன் உஸ்தாத்
13. பல்லாரி நகர் அல்லாபக்ஷ
என்கிற முன்னா
14. ஹகரிபொம்மனஹள்ளி பரமேஸ்வரப்பா
15. ஹரப்பனஹள்ளி என்.எம்.நூர் அகமது
16. சிரகுப்பா பரமேஸ்வர் நாயக்
17. கம்ப்ளி ராஜூ நாயக்
18. கொள்ளேகால் புட்டசாமி
19. குண்டலுப்பேட்டை கடபூர் மஞ்சுநாத்
20. காபு நபீனா சமத்
கனகபுரா-நாகராஜ்
21. கார்கலா ஸ்ரீகந்த் கொச்சூர்
22. உடுப்பி தக்ஷித் ஷெட்டி
23. பைந்தூர் மன்சூர் இப்ராகிம்
24. குந்தாப்புரா ரமேஷ் குந்தாப்புரா
25. மங்களூரு தெற்கு சுமதி ஹெக்டே
26. கனகபுரா நாகராஜ்
27. எலகங்கா எம்.முனேகவுடா
28. சர்வக்ஞநகர் முகமது முஸ்தாப்
29. யஷ்வந்தபுரம் ஜவராயகவுடா
30. திப்தூர் சாந்தகுமார்
கடூர்-ஒய்.எஸ்.வி.தத்தா
31. சிரா ஆர்.உக்ரேஷ்
32. ஹானகல் மனோகர் தாசில்தார்
33. சிந்தகி விசாலாட்சி சிவானந்தா
34. கங்காவதி எச்.ஆர்.சன்னகேசவா
35. எச்.டி.கோட்டை ஜெயப்பிரகாஷ்
36. ஜேவர்கி தொட்டப்பகவுடா
சிவலிங்கப்பகவுடா
37. சகாப்புரா குருலிங்கப்பகவுடா
38. கார்வார் சைத்ரா கோட்கார்
39. புத்தூர் திவ்யா பிரபா
40. கடூர் ஒய்.எஸ்.வி.தத்தா
அரக்கல்கோடு-ஏ.மஞ்சு
41. ஹொலேநரசிபுரா எச்.டி.ரேவண்ணா
42. பேளூர் கே.எஸ்.லிங்கேஷ்
43. சக்லேஷ்புரா எச்.கே.குமாரசாமி
44. அரக்கல்கோடு ஏ.மஞ்சு
45. ஹாசன் ஸ்வரூப் பிரகாஷ்
46. சரவணபெலகோலா பாலகிருஷ்ணா
47. மகாலட்சுமி லே-அவுட் ராஜண்ணா
48. இரியூர் ரவீந்திரப்பா
49. மாயகொண்டா ஆனந்தப்பா.
50. சொரப் சந்திரேகவுடா.