ஜம்மு மற்றும் காஷ்மீர்: பாதுகாப்பு படை, பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கி சண்டை
ஜம்மு மற்றும் காஷ்மீரின் தோடா பகுதியில், சில நாட்களுக்கு முன் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் உயரதிகாரி உள்பட 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.;
தோடா,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
இதுபற்றி ஜம்மு மற்றும் காஷ்மீர் போலீசார் வெளியிட்ட செய்தியில், தோடா மாவட்டத்தில் கஸ்திகார் பகுதியில் சண்டை நடந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தோடா பகுதியில், சில நாட்களுக்கு முன் உயரதிகாரி உள்பட 4 ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் உயிரிழந்தனர்.