ஜம்பு சவாரியில் கலந்து கொள்ளும்யானைகளின் உடல் எடை அதிகரிக்க சத்தான உணவுகள்

ஜம்பு சவாரியில் கலந்து கொள்ளும் யானைகளுக்கு உடல் எடைகள் கூடுவதற்கு சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

Update: 2023-09-03 18:45 GMT

மைசூரு

தசரா விழா

மைசூரு தசரா விழா வருகிற அக்டோபர் மாதம் 15-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இந்த தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரியில் கலந்து கொள்ளும் யானைகள் ஊர்வலம் காண்போரை மெய் சிலிர்க்க வைக்கும்.

இந்த ஜம்பு சவாரியில் 15 யானைகள் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டது. அந்த யானைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதில் முதற்கட்டமாக நாகரஒலே வீரனஒசஹள்ளியில் கிராமத்தில் இருந்து 9 யானைகள் மைசூரு அசோகபுரம் வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளது. முன்னதாக இந்த யானைகளை அழைத்து வரும் கஜ பயணம் கடந்த 1-ந் தேதி நிறைவடைந்தது. கடந்த 2 நாட்களாக யானைகள் மைசூரு அசோகபுரத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் ஓய்வு எடுத்து வருகின்றது.

சத்தான உணவுகள்

இந்தநிலையில் யானைகளுக்கு உடல் எடைள் அதிகரிக்க வெல்லம், வைக்கோல், கரும்பு, நெல்லுடன் சேர்ந்து சத்துள்ள உணவுகளும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் யானைகளை குளிப்பாட்டுவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஒரு யானைகளுக்கு தலா 2 பாகன்கள் நியமிக்கப்பட்டுள்ளது. இதுதவிர யானைகளை பராமரிப்பதற்கு உதவியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் வனத்துறை அலுவலகத்தில் உள்ள யானைகளை பார்வையிடுவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி குழந்தைகள் மற்றும் சுற்றுலா பயணிகள் வனத்துறை அலுவலகத்தில் உள்ள யானைகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

அதே நேரம் யானைகளின் அருகே நின்று பார்வையிடுவதற்கோ, செல்பி எடுத்து கொள்வதற்கோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த முறை புதிதாக 4 யானைகள் வரவழைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

அரண்மனைக்கு அழைத்து வரப்படும்

அந்த யானைகள் மட்டும் ரெயில் சத்தம் கேட்டதும் மிரளுவதாக கூறப்படுகிறது. இருப்பினும் அந்த யானைகளை வனத்துறை ஊழியர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறது.

அதேபோல தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு யானையின் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. தனியாக கட்டி வைக்கப்பட்டுள்ள அந்த யானைக்கு சத்தான உணவுகள் வழங்கப்படுகிறது.

மேலும் சுற்றுலா பயணிகள் பார்ப்பதற்கு இந்த முறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்தநிலையில் 9 யானைகளும் நாளை (செவ்வாய்க்கிழமை) அசோகபுரம் வனத்துறை அலுவலகத்தில் இருந்து மைசூரு அரண்மனைக்கு அழைத்து வரப்படுகிறது.

அங்கு மாவட்ட கலெக்டர் மற்றும் அரண்மனை மண்டலி, தசரா குழுவினர் தரப்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்