ஆதார் அட்டை வைத்திருந்தால் ரூ.4.75 லட்சம் கடன் வழங்கும் மத்திய அரசு ...? உண்மையா...?

ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசு லட்சக்கணக்கில் கடன் வழங்கவிருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது.

Update: 2022-11-22 06:03 GMT

புதுடெல்லி

நாட்டில் ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு தலா 4,78,000 ரூபாயை மத்திய அரசு கடனாக வழங்கவிருப்பதாக சமூக ஊடங்களில் வெளியாகும் தகவல்கள் உண்மையில்லை என்று பிஐபி விளக்கம் அளித்துள்ளது.

ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசு லட்சக்கணக்கில் கடன் வழங்கவிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இணைத்து சமூக ஊடகங்களில் புரளி ஒன்று மிக வேகமாகப் பரவி வந்தது.

இதில் துளியும் உண்மையில்லை என்று பிஐபி அறிவித்துள்ளது. தவறான தகவல் இணையதளங்களில் பரவி வருவதாகவும், அது உண்மையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

தயவுகூர்ந்து இதுபோன்ற பொய்யான தகவல்களை மக்கள் யாரும் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என்றும், இதுபோன்ற புரளிகளைப் பரப்புவதும் குற்றம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஐபியின் உண்மை அறியும் சமூக ஊடகப் பக்கம், இதுபோன்று பரவும் தவறான தகவல்கள் குறித்து விளக்கங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறது. இதுபோன்ற ஒரு தகவல் கடந்த ஆகஸ்ட் மாதமும் பரவியது. அப்போதும் இந்தப் பக்கத்தில் அதுபொய்யானது என்று விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. தற்போதும் இது குறித்து பதிவிட்டுள்ளது.




Tags:    

மேலும் செய்திகள்