சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில் திருப்பதி கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வழிபாடு

சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில் திருப்பதி கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வருகை தந்து வழிபாடு நடத்தினர்.

Update: 2023-07-13 06:40 GMT

Image Courtesy : twitter@isro

திருப்பதி,

ஸ்ரீஹரிகோட்டா, பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நிலவு குறித்து ஆய்வுசெய்ய ரூ.615 கோடி செலவில் சந்திரயான்-3 திட்டம் அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் நிறைவு செய்துள்ளனர். ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் தற்போது எல்.வி.எம். 3 ராக்கெட் என்று அழைக்கப்படுகிறது. இந்த ராக்கெட்டில் சந்திரயான்-3 விண்கலம் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்பட உள்ளது.

சந்திரயான்-3 விண்கலம் நாளை விண்ணில் ஏவப்பட உள்ளது. ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து அதிக எடையை தாங்கி செல்லும் மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் பாய்கிறது.

இதனிடையே இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவினர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபாடு செய்தனர். ஒவ்வொரு முறை ராக்கெட் ஏவப்படும் போதும், இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவினர் திருப்பதிக்கு வந்து வழிபாடு செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருகை தந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் வழிபாடு நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்