பிரதமரை பார்த்து பயப்பட மாட்டேன் போலீசை அனுப்பி என்னை அச்சுறுத்த முடியாது - ராகுல்காந்தி
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது சொந்த தொகுதியான வயநாடுக்கு சென்றார்.
வயநாடு,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது சொந்த தொகுதியான வயநாடுக்கு சென்றார். அங்கு புதிதாக கட்டப்பட்ட வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
எத்தனையோ பேர், பிரதமர், பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ்., போலீஸ் ஆகியோரைப் பார்த்து பயப்படலாம். ஆனால் நான் சிறிது கூட பயப்பட மாட்டேன். அதுதான் அவர்களுக்கு பிரச்சினை. ஏனென்றால் நான் உண்மையில் நம்பிக்கை உள்ளவன்.
நான் எவ்வளவு தாக்கப்பட்டாலும், என் வீட்டுக்கு எத்தனை தடவை போலீஸ் அனுப்பப்பட்டாலும், என் மீது எத்தனை வழக்குகள் போடப்பட்டாலும் எனக்கு பயம் கிடையாது. என்னை அச்சுறுத்த முடியாது. நான் எப்போதும் உண்மையின் பக்கம் நிற்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.