சேது சமுத்திர திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரப்பட்டுள்ளதா? - மத்திய அரசு பதில்

சேது சமுத்திர திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரப்பட்டுள்ளதா என்பத் குறித்து மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

Update: 2023-03-16 20:02 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. வில்சன், சேது சமுத்திர கால்வாய் திட்டத்துக்கான சுற்றுச்சூழல் அனுமதி தொடர்பான விஷயங்களை கேள்விகளாக கேட்டு இருந்தார்.

இதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை இணை மந்திரி அஸ்வினிகுமார் சவுபே நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:-

சேதுசமுத்திர கால்வாய் திட்டம் போன்ற திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டத்துடன் கூடிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை பெறுவது திட்டத்துக்கான அனுமதி ஆகும். இதன்படி 6-வது புனரமைப்பு திட்டத்துக்கு 31-3-2005-ம் ஆண்டு அனுமதி பெறப்பட்டது. ஆனால் இது தொடர்பான வழக்கில் ராமர் பாலம் சேதப்படுத்தப்படாமல் மாற்று திட்டம் செயல்படுத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

ஆனால் அரசு மேற்கூறிய புனரமைப்பு திட்டத்தை செயல்படுத்தவில்லை. புதிதாக எந்த பணிகளும் மேற்கொள்ளவில்லை. அதற்கான சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது குறித்து எந்த முன்மொழிவுகளும் இல்லை என்று கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்