மின்வாரியத்துறையில் முதல்நிலை உதவியாளர் தேர்வில் முறைகேடு: ரூ.20 லட்சம் லஞ்சம் கேட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டர்

மின்வாரியத்துறையில் முதல்நிலை உதவியாளர் தேர்வில் முறைகேடு வழக்கில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் ரூ.20 லட்சம் லஞ்சம் கேட்கும் ஆடியோ உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-09-17 18:45 GMT

மைசூரு:

ரூ.20 லட்சம் லஞ்சம்

கர்நாடகத்தில் எஸ்.ஐ. தேர்வு உள்பட பல்வேறு நியமன தேர்வுகளில் முறைகேடுகள் நடந்தது கண்டுப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் மின்வாரியத்துறையில் முதல்நிலை உதவியாளர் தேர்விலும் முறைகேடு நடந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த முறைகேட்டில் மைசூரு நரசிம்மராஜா போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் பெண் சப்-இன்ஸ்பெக்டர் அஸ்வினி என்பவர், ஒருவரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் கேட்கும் செல்போன் ஆடியோ உரையாடலை காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எம்.லட்சுமண் வெளியிட்டார்.

இந்த செல்போன் ஆடியோ 30 நிமிடம் உள்ளது. இந்த ஆடியோவில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் அஸ்வினி, சங்கமேஸ்வர் என்பவரிடம் பெங்களூரு, மைசூரு மின்வாரியத்துறையில் முதல்நிலை உதவியாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டு தேர்ச்சி பெறவைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்.

சப்-இன்ஸ்பெக்டர் அஸ்விணி, பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டியை சேர்ந்தவர். இதேபோல் சங்கமேஸ்வரும் அதேப்பகுதியை சேர்ந்தவர் என்பது கூறப்படுகிறது. இந்த ஆடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

விசாரணை

இந்த ஆடியோவை வெளியிட்டு காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைப்பாளர் லட்சுமண் கூறியதாவது:-

இதுபோன்று பல்வேறு அரசு வேலைகளில் முறைகேடு நடந்துள்ளது. பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேறு நியமண பணிகளிலும் லஞ்சம் கேட்டுள்ளார். இதுபோன்று லஞ்சமாக பெறப்படும் பணம் பா.ஜனதா

எம்.எல்.ஏ., மந்திரிகளுக்கு செல்கிறது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்த வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்