ரெயில்வே ஊழல் வழக்கு: மருத்துவ சிகிச்சைக்காக லாலு பிரசாத் யாதவ் சிங்கப்பூர் செல்ல அனுமதி

லாலு பிரசாத் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.;

Update: 2022-09-28 16:26 GMT

Image Courtesy: PTI 

புதுடெல்லி,

பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஸ்டிரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. ரெயில்வே ஊழல் வழக்கில் ஜாமீனிலுள்ள அவரது பாஸ்போர்ட்டு, கோர்ட்டு வசம் இருந்தது. இதனால் அவர் அக்டோபர் 10-25 வரை சிங்கப்பூரில் சிகிச்சை பெற அனுமதி கோரியிருந்தார்.

எனவே தனது பாஸ்போர்ட்டை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று லாலு பிரசாத் சார்பில் ராஞ்சி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஏற்ற கோர்ட்டு, இதுதொடர்பாக பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது.

பின்னர் விசாரணையை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தது. இந்நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்லக் கோரிய லாலு பிரசாத்தின் மனுவை டெல்லி கோர்ட்டு இன்று விசாரித்தது. இதனை சிறப்பு நீதிபதி (சிபிஐ) கீதாஞ்சலி கோயல் விசாரித்தார். பின்னர், வரும் அக்டோபர் 10 முதல் அக்டோபர் 25 வரை லாலு பிரசாத் யாதவ் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி அவர் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்