திரிபுராவில் ரூ. 5.5 கோடி மதிப்புள்ள தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது

திரிபுரா மாநில போலீசார் ரூ. 5.50 கோடி மதிப்புள்ள தடை செய்யப்பட்ட யாபா மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.;

Update:2025-03-22 18:31 IST
திரிபுராவில் ரூ. 5.5 கோடி மதிப்புள்ள தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது

அகர்தலா ,

திரிபுரா மாநிலம் அகர்தலா போலீசாருக்கு போதைப்பொருள் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நேற்று இரவு அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது 3 பேர் சந்தேகத்திற்கிடமான டிராலி பை ஒன்றை வைத்திருந்தனர். அந்த டிராலி பையில் போலீசார் சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் 1.10 லட்சம் யாபா மாத்திரைகளை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் இதனை பறிமுதல் செய்த போலீசார் இதற்கு தொடர்புடைய 3 பேரையும் கைது செய்தனர். இந்த போதைப்பொருளின் சந்தை மதிப்பு ரூ. 5.50 கோடி என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் போதைப்பொருள் கடத்திய 3 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஒருவர் ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் தேடப்படும் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்