சாலை மறியலில் ஈடுபட்ட பி.எப்.ஐ. அமைப்பினர் மீது வழக்கு
சாலை மறியலில் ஈடுபட்ட பி.எப்.ஐ. அமைப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடகம் உள்பட 15 மாநிலங்களில் பி.எப்.ஐ. அமைப்புகள் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடி சோதனை நடத்தினர். இதில் மொத்தம் 106 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் உடுப்பி டவுனில் உள்ள பி.எப்.ஐ. அலுவலகங்கள் மற்றும் அந்த அமைப்பை சேர்ந்தவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தினர். இதில் அவர்களிடம் இருந்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றி கொண்டனர்.
மேலும் சிலரை கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பி.எப்.ஐ. அமைப்பை சேர்ந்த வர்கள்அப்பகுதிகளில் உள்ள சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாக பி.எப்.ஐ. அமைப்பை சேர்ந்த 11 பேர் மீது உடுப்பி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.