மணிப்பூரில் இணையச்சேவை தடை 15-ந்தேதி வரை நீட்டிப்பு..!

மணிப்பூரில் இணையச்சேவை தடை 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-06-12 16:57 GMT

இம்பால்,

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினருக்கு இடையே கடந்த மாதம் தொடக்கத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. இதையடுத்து மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மாதம் 3-ந்தேதி முதல் இணையச் சேவைக்கு தடை நீடித்து வருகிறது.

இந்த நிலையில் இணையச் சேவைக்கான தடையை மேலும் நீட்டித்து மாநில அரசு 15-ந்தேதி உத்தரவு பிறப்பித்தது. வெறுப்புணர்வைத் தூண்டக் கூடிய புகைப்படங்கள், வீடியோக்கள், பேச்சுகளை பரப்ப சில சமூக விரோத சக்திகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது என்பதால் இணையச் சேவை தடை 15-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த தடையில் கைபேசி இணையச் சேவை மற்றும் அகண்ட அலைவரிசை இணையச் சேவை உள்ளடங்கியதாகும். அரசு பயன்பாட்டுக்கான இணையச் சேவைக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்