பிரதமர் மோடி 11-ந் தேதி பெங்களூரு வருகை: சர்வதேச விமான நிலையம் செல்வோருக்கு தொந்தரவு ஏற்பட கூடாது - அதிகாரிகளுக்கு பசவராஜ் பொம்மை உத்தரவு

பிரதமர் மோடி 11-ந் தேதி பெங்களூரு வருகையையொட்டி சர்வதேச விமான நிலையம் செல்வோருக்கு தொந்தரவு ஏற்பட கூடாது என்று அதிகாரிகளுக்கு பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-10-20 18:45 GMT

பெங்களூரு:

பிரதமர் மோடி வருகிற 11-ந் தேதி பெங்களூருவுக்கு வருகிறார். சர்வதேச விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2-வது முனையம் மற்றும் அங்கு நிறுவப்பட்டுள்ள கெம்பேகவுடாவின் 108 அடி உயர வெண்கல சிலையை அவர் திறந்து வைக்கிறார். பிரதமர் மோடியின் வருகை குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உயர் அதிகாரிகளுடன் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார்.

அதில் பேசிய பசவராஜ் பொம்மை, "பிரதமர் மோடி வருகிற 11-ந் தேதி பெங்களூரு வருகிறார். சர்வதேச விமான நிலைய வளாகத்தில் கெம்பேகவுடா சிலை மற்றும் 2-வது முனையத்தை திறந்து வைக்க இருக்கிறார். இதையொட்டி அன்றைய தினம் பெங்களூருவில் இருந்து விமான நிலையத்திற்கு செல்லும் மக்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாத வகையில் பயண திட்டங்களை அதிகாரிகள் வகுக்க வேண்டும். கர்நாடகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் புனித மண் சேகரிக்கப்படுகிறது. இதற்காக 20 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் 15 நாட்கள் மாநிலம் முழுவதும் சுற்றி மண்ணை சேகரித்து பெங்களூரு வரும். இதற்கு தேவையான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட பஞ்சாயத்து செயல் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்