மைசூரு கிறிஸ்துவ பாதிரியார் இல்லத்தை இடிக்க இடைக்கால தடை

மைசூரு கிறிஸ்துவ பாதிரியார் இல்லத்தை இடிக்க இடைக்கால தடை விதிக்க கோரி மைசூரு கோர்ட்டிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2023-01-15 19:54 GMT

மைசூரு:-

மைசூரு நகரில் உள்ள பெங்களூரு நீலகிரி சாலையில் கிறிஸ்தவ பாதிரியார்கள் தங்கும் இல்லம் அமைந்துள்ளது. இந்த இல்லம் கடந்த 75 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்நிலையில் புதிய கிறிஸ்துவ பாதிரியாகர்கள் இல்லம் மைசூரு பன்னி மண்டபம் நெல்சன் மண்டேலா சாலையில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி சாலையில் உள்ள பழமையான பாதிரியார் இல்லத்தை இடிக்கவேண்டும் என்று தற்போது பொறுப்பில் இருக்கும் பாதிரியார் வில்லியம்சன் உத்தரவிட்டார். அதன்படி 20 சதவீத கட்டிடங்கள் இடிக்கப்பட்டது. இந்நிலையில் இதற்கு கிறிஸ்துவ கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மைசூருர் கோட்டில் தடை கோரி மனு செய்தனர். இந்த மனு தொடர்பான விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று நீதிபதி இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் பாதிரியார் இல்லம் தொடர்பான இறுதி கட்ட உத்தரவு வரும் வரை, அந்த இல்லத்தை இடிக்க கூடாது என்று தடை விதித்தார். இதையடுத்து கட்டிடம் இடிக்கும் பணிகள் நிறுத்தப்பட்டது. மேலும் அந்த இடத்தில் போலீசார் பாதுகாப்பிற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த கோர்ட்டு உத்தரவிற்கு கிறிஸ்துவ கூட்டமைப்பினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்