அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசியதாக பாஜக மந்திரி மீது ' கருப்பு மை' வீச்சு
அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசியதாக பாஜக மந்திரி மீது ‘கருப்பு மை’ வீசப்பட்டுள்ளது.
மும்பை,
மராட்டிய மாநில பாஜக மந்திரி சந்திரகாந்த் பாட்டில். இவர் மராட்டிய அமைச்சரவையில் உயர்நிலை மற்றும் தொழில்நுட்ப கல்வி மந்திரியாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், மந்திரி சந்திரகாந்த் நேற்று பூம்புரி நகரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய சந்திரகாந்த், பள்ளி, கல்லூரிகளை தொடங்க அம்பேத்கர், ஜோதிபா ஹுலி அரசின் அனுமதியை கேட்கவில்லை. அவர்கள் மக்களிடம் பிச்சை எடுத்து பள்ளி, கல்லூரிகளை தொடங்கினர்' என்றார்.
அவரது பேச்சு சில தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியை முடித்து வெளியே வந்த மந்திரி சந்திரகாந்த் மீது கருப்பு மை வீசப்பட்டது. அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது கருப்பு மை வீசப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.