பணவீக்கம் 'மைனஸ்': அரசின் செயல்பாட்டில் பெரிய தவறு இருக்கிறது - ப.சிதம்பரம் கருத்து
பணவீக்கம் மைனசில் அரசின் செயல்பாட்டில் பெரிய தவறு இருக்கிறது என்று ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வேலை கேட்போர் எண்ணிக்கை உயர்வது எதைச் சுட்டிக் காட்டுகிறது?. மொத்தக் குறியீட்டுப் பணவீக்கம் எதிர்மம் (மைனஸ்) ஆக இருப்பது எதைச் சுட்டிக் காட்டுகிறது?.
ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மாதம் 5 கிலோ தானியம் விலை இல்லாமல் தொடர்ந்து கொடுக்கப்படும் என்ற அரசின் முடிவு எதைச் சுட்டிக் காட்டுகிறது?. இந்த தரவுகளில் உள்ள சரியான பொருளை அரசின் ஆலோசகர்கள் புரிந்துகொள்ளவில்லை என்றால் இந்த அரசின் செயல்பாட்டில் பெரிய தவறு இருக்கிறது என்ற முடிவுக்கு வருவோம்.
இவ்வாறு அவர் அதில் பதிவிட்டுள்ளார்.