2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டின் சில்லறை பணவீக்கம் 4.25 சதவிகிதமாக குறைவு
2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டின் சில்லறை பணவீக்கம் 4.25 சதவிகிதமாக குறைந்துள்ளது.
டெல்லி,
மே மாதத்திற்கான நாட்டின் சில்லறை வர்த்தக பண வீக்கம் 4.25 சதவிகிதமாக குறைந்துள்ளது. இது கடந்த 25 மாதங்களில் இல்லாத அளவிற்கு மிகக்குறைவான பண வீக்கமாகும்.
சில்லறை வர்த்தக பணவீக்கம் குறைந்துள்ள நிலையில் உணவு பொருட்களின் விலை குறியீடும் ரிசர்வ் வங்கி நிர்ணயித்த அளவான 4 சதவிகிதத்தை நெருங்கியுள்ளது. கடந்த 3 மாதங்களாக சில்லறை பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் நிர்ணயிக்கப்பட்ட அளவிலேயே உள்ளது.
உணவு பொருட்களின் விலை குறைவு சில்லறை பணவீக்கம் குறைவுக்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என கடந்த சில நாட்களுக்கு முன் ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையில் தற்போது சில்லறை பணவீக்கமும் 2 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு குறைவாக உள்ளது இந்திய பொருளாதார சூழ்நிலையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.