மார்ச் மாத நிலவரப்படி இந்தியாவின் வெளிநாட்டு கடன் ரூ.47 லட்சம் கோடியாக உயர்வு - மத்திய அரசு

இந்தியாவின் வெளிநாட்டு கடன் தொடர்பான நிலை அறிக்கையின் 28-வது பதிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

Update: 2022-09-05 18:59 GMT

அதன்படி நாட்டின் வெளிநாட்டு கடன் கடந்த மார்ச் மாத நிலவரப்படி 8.2 சதவீதம் அதிகரித்து 620.7 பில்லியன் டாலராக (சுமார் ரூ.47 லட்சம் கோடி) உள்ளது.

கடந்த ஆண்டு மொத்த கடன் 573.7 பில்லியன் டாலராக இருந்த நிலையில், இந்த ஆண்டு அது மேலும் உயர்ந்திருக்கிறது.

எனினும் நாட்டின் வெளிநாட்டு கடன் தொடர்ந்து நிலையானதாகவும், விவேகத்துடன் நிர்வகிக்கப்படுவதாகவும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்