இந்திய ரூபாயின் மதிப்பு சீராக தொடர்கிறது - ரிசர்வ் வங்கி கவர்னர் தகவல்

இந்திய ரூபாயின் மதிப்பு சீராக உள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.

Update: 2022-09-06 17:53 GMT

புதுடெல்லி,

இதர கரன்சிகள் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பு சீராக உள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.

பணச் சந்தை மற்றும் டிரைவேட்டிவ்ஸ் சங்கத்தின் ஆண்டு விழாவில் உரையாற்றிய சக்திகாந்த தாஸ், அமெரிக்க ரிசர்வ் வங்கி, வட்டி விகிதங்களை மேலும் அதிகரிக்கும் என்று அறிவித்துள்ளதால், உலக நிதிச் சந்தைகளில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நடப்பு நிதியாண்டின் இரண்டாம் பகுதியில், விலைவாசி உயர்வு விகிதம் குறையும் என்று ரிசர்வ் வங்கி எதிர்பார்ப்பதாக கூறினார். 2023 ஜனவரி முதல் விலைவாசி உயர்வு விகிதம் வெகுவாக குறையும் என்று நம்பிக்கை தெரிவித்தார். நடப்பு நிதியாண்டில், இந்திய ரூபாயின் மதிப்பு பெரிய ஏற்ற இறக்கங்கள் இன்றி, சீராக தொடர்வதை சுட்டிக் காட்டினார்.

உலக கரன்சிகளுக்கு எதிராக அமெரிக்க டாலரின் மதிப்பு 11.8 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 5.1 சதவீதம் குறைந்துள்ளதாக கூறினார். உலக அளவில் இது தான் மிகக் குறைந்த சரிவு விகிதம் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்