உத்தரபிரதேசத்தில் சட்ட விரோதமாக தங்கியிருந்த 74 ரோஹிங்கியா அகதிகள் கைது

உத்தரபிரதேசத்தில் சட்ட விரோதமாக தங்கியிருந்த 74 ரோஹிங்கியா அகதிகள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-07-24 21:23 GMT

லக்னோ,

உத்தரபிரதேசத்தின் பல மாவட்டங்களில் மியான்மரை சேர்ந்த ரோஹிங்கியா அகதிகள் சட்ட விரோதமாக தங்கியிருப்பதாக மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து உள்ளூர் போலீசார் உதவியுடன் பல்வேறு மாவட்டங்களில் பயங்கரவாத தடுப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து 74 அகதிகள் கைது செய்யப்பட்டனர்.

இதில் 3 சிறுவர்கள் உள்பட 58 ஆண்களும், 2 சிறுமிகள் உள்பட 16 பெண்களும் அடங்கி உள்ளனர். அவர்கள் மீது அந்தந்த மாவட்டங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த நடவடிக்கையின்போது அதிகபட்சமாக மதுரா மாவட்டத்தில் 31 பேரும், அலிகாரில் 17 பேரும், ஹபூரில் 16 பேரும் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்