லண்டன்: உலக சுற்றுலா கண்காட்சியில் இந்திய அரங்கத்தை திறந்து வைத்தார் உயர் ஆணையர் விக்ரம் துரைசாமி!

லண்டன் நகரில் ‘உலக சுற்றுலா சந்தை’ கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.

Update: 2022-11-08 09:12 GMT

லண்டன்,

லண்டன் நகரில் உலகளாவிய பயண மற்றும் சுற்றுலா கண்காட்சி வருகிற 9-ந் தேதி வரை நடக்கிறது.இந்த கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த கண்காட்சியில் உலக அளவில் சுற்றுலா மற்றும் தொழில் துறை சார்ந்த முன்னணி நிறுவனங்கள், பயண ஏற்பாட்டாளர்கள், முகவர்கள், நட்சத்திர ஓட்டல் உரிமையாளர்கள் என பல தரப்பினரும் கலந்துகொண்டு தங்களது சிறப்புகளை தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், லண்டனில் நடைபெறும் 'உலக சுற்றுலா சந்தை' கண்காட்சியில் இந்திய அரங்கத்தை இந்திய உயர் ஆணையர் விக்ரம் துரைசாமி இன்று திறந்து வைத்தார். பல்வேறு மாநிலங்களின் சார்பில் அமைக்கப்பட்ட அரங்கங்களையும் அவர் திறந்து வைத்தார்.

இந்த கண்காட்சியில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சக செயலாளர் அர்விந்த், ஒடிசா, மத்திய பிரதேசம், கர்நாடகா, மராட்டியம், ராஜஸ்தான் மாநில தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்