சிக்கிமில் நிலச்சரிவில் சிக்கித் தவித்த 3,500-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை மீட்ட இந்திய ராணுவம்

வடக்கு சிக்கிமின் சுங்தாங்கில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக சிக்கித் தவித்த சுமார் 3,500 சுற்றுலாப் பயணிகளை இந்திய ராணுவம் மீட்டது.

Update: 2023-06-17 14:32 GMT

கோப்புப்படம்

சிக்கிம்,

வடக்கு சிக்கிமின் சுங்தாங்கில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக சிக்கித் தவித்த சுமார் 3,500 சுற்றுலாப் பயணிகளை இந்திய ராணுவம் மீட்டது.

லாச்சென், லாச்சுங் மற்றும் சுங்தாங் பள்ளத்தாக்குகளில் வெள்ளிக்கிழமை கனமழை பெய்தது. இதையடுத்து அங்கு சாலை இணைப்பை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் அங்கு சிக்கித் தவித்த சுற்றுலாப் பயணிகளை மீட்கும் பணியில் இந்திய ராணுவம் இறங்கியது. கனமழை மற்றும் சீரற்ற காலநிலையிலும் கடுமையாக போராடி தற்காலிக கடவை உருவாக்கி சுற்றுலாப் பயணிகளை ராணுவம் மீட்டு வருகிறது.

இன்று மாலை 3 மணி வரையில் 2,000 சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கூடாரங்கள் மற்றும் மருத்துவ உதவி மையங்கள் அமைக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு சூடான உணவும் மருத்துவ உதவியும் வழங்கப்பட்டது.

சுற்றுலாப் பயணிகளின் பயணத்திற்கான பாதை சரிசெய்யப்படும் வரை அவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்