உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக உள்ள இந்தியா...!

2018-2022 உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக இந்தியா உள்ளது

Update: 2023-03-14 05:56 GMT

புதுடெல்லி:

மேக் இன் இந்தியா" திட்டத்தின் மூலம் இந்தியாவில் அதிக அளவு ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இருந்தாலும் 2018-2022 ஆம் ஆண்டில் மொத்த உலகளாவிய இறக்குமதியில் 11 சதவீத பங்கை இந்தியா கொண்டு உள்ளது.

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (எஸ்ஐபிஆர்ஐSIPRI) வெளியிட்ட சர்வதேச ஆயுதப் பரிமாற்றங்கள் பற்றிய சமீபத்திய புள்ளிவிவரங்களில் ரஷ்யா இந்தியாவிற்கு மிகப்பெரிய ஆயுதங்கள் வழங்குபவராக உள்ளது என்பதைக் காட்டுகிறது. 2018-2022 கால கட்டங்களில் மொத்த இறக்குமதியில் அதன் பங்கு 45 சதவீதமாகும்.

36 ரபேல் போர் விமானங்களுக்கான ரூ.59,000 கோடி ஒப்பந்தம் போன்றவற்றின் மூலம் அமெரிக்காவை இரண்டாவது இடத்தில் இருந்து வெளியேற்றி பிரான்ஸ் 29 சத்வீத பங்கு வகிக்கிறது.

இந்தியாவிற்கான மொத்த ஆயுத விற்பனையில் அமெரிக்கா 11 சதவீதம் அதிகரித்துள்ளது.ஆயுத இறக்குமதியில் இந்தியாவைத் தொடர்ந்து சவுதி அரேபியா (9.6%), கத்தார் (6.4%), ஆஸ்திரேலியா (4.7%), சீனா (4.6%), எகிப்து (4.5%), தென் கொரியா (3.7%), பாகிஸ்தான் (3.7%) ஆகிய நாடுகள் முதலிடத்தில் உள்ளன.

முதல் 10 ஆயுத ஏற்றுமதியாளர்கள், அமெரிக்கா (40%), ரஷியா (16%), பிரான்ஸ் (11%), சீனா (5.2%), ஜெர்மனி (4.2%), இத்தாலி (3.8%), இங்கிலாந்து (3.2). ஸ்பெயின் (2.6%), தென் கொரியா (2.4%) மற்றும் இஸ்ரேல் (2.3%). தற்செயலாக, பாகிஸ்தானுக்கான ஆயுத விநியோகத்தில் சீனா 77% பங்கைக் கொண்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய இராணுவச் செலவு செய்யும் நாடான இந்தியா ஆயுத உற்பத்தியில் `ஆத்மநிர்பர்தா' (தன்னம்பிக்கை) அடைய தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ராஜ்யசபையில் பேசியபாதுகாப்பு துணை மந்திரி அஜய் பட் பல்வேறு கொள்கை முன்முயற்சிகள் காரணமாக, 2018-19 ஆம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த செலவீனத்தில் 46 சதவீதத்தில் இருந்து 36.7 சதவீதமாக குறைந்துள்ளது என கூறினார்.

எஸ்ஐபிஆர்ஐ புள்ளிவிவரங்களின் படி, 1993 முதல் இந்தியா உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக உள்ளது. இது மிகப் பெரிய தனியார் துறை பங்கேற்புடன் வலுவான பாதுகாப்பு-தொழில்துறை தளத்தை உருவாக்குவதில் இந்தியாவின் தொடர்ச்சியான தோல்வியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்