அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா வேகமாக வளர்ச்சியடைய பாடுபட வேண்டும் - தொண்டர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
டெல்லியில் 2-வது நாளாக நடைபெற்று வரும் பா.ஜ.க. தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.;
புதுடெல்லி,
டெல்லியில் 2-வது நாளாக நடைபெற்று வரும் பா.ஜ.க. தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது,
நாம் மெத்தனமாக இருக்கக்கூடாது, தேர்தல் வெற்றிக்கு கடினமாக உழைக்க வேண்டும். பா.ஜ.க. கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும் என எதிர்கட்சிகள் பேசுகின்றன. அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா வேகமாக வளர்ச்சியடைய பாடுபட வேண்டும்.
முதல் முறை வாக்காளர்கள் உள்ளிட்ட அனைவரின் நம்பிக்கையையும் நாம் ஈட்டியாக வேண்டும். பரப்புரையின்போது சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவினரையும் நாம் சென்றடைய வேண்டும். அடுத்த 100 நாட்களுக்கு புதிய உற்சாகம், நம்பிக்கையுடன் நாம் பணியாற்ற வேண்டும்.
18 வயதை எட்டிய இளைஞர்கள், நாட்டின் 18வது மக்களவையை தேர்ந்தெடுக்கப் போகிறார்கள். அனைவரின் நம்பிக்கையையும் பெற வேண்டும் . இவ்வாறு அவர் கூறினார்.