அமேதியில் ஏ.கே.-203 ரக துப்பாக்கிகள் தயாரிப்பு தொடங்கியது
உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் ஏ.கே.-203 ரக துப்பாக்கிகள் தயாரிப்பு தொடங்கியது.
புதுடெல்லி,
ரஷிய தயாரிப்பான கலாஷ்னிகோவ் ஏ.கே.-203 ரக துப்பாக்கிகள் புகழ்பெற்றவை. இவற்றை உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் உள்ள கோர்வா ஆயுத தொழிற்சாலையில் தயாரிக்க இந்திய-ரஷிய ரைபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற கூட்டு நிறுவனம் தொடங்கப்பட்டது.
இந்த நிறுவனம் கோர்வா ஆயுத தொழிற்சாலையில் கலாஷ்னிகோவ் ஏ.கே.-203 ரக துப்பாக்கிகளின் முதல் தொகுப்பை தயாரித்து உள்ளது. அந்த துப்பாக்கிகளை இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.